Wednesday, August 29, 2012

தைமூர்

                      தைமூர் 

     ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டுமென்ரால் விண்ணை முட்டும் இமயமலை தொடரை தாண்டி தான் வரவேண்டும்.இல்லையென்றால் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் சிந்து நதி கரையை தாண்டி தான் வரவேண்டும்.  

            1398   இல் மங்கோலிய பரம்பரையில் வந்த தைமூர் என்கிற கொடுங்கோல் மன்னன் மத்திய ஆசியாவில் இருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி ஆப்கானிஸ்தானை கடந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தான்.சிந்து  நதியை அவன் சட்டை செய்யவில்லை.படகுகளை வரிசையாக இணைத்து பாலம் ஏற்படுத்தி கண நேரத்தில் நதியை கடந்து டெல்லியை நோக்கி முன்னேறினான்.அவன் இந்தியாவில் தங்கி இருந்தது ஆறு மாத காலம்தான்.
       இருப்பினும் பிற்பாடு மொகலாய ராஜ்யம் இந்தியாவில் தோன்றுவதற்கான ஒரு முக்கிய காரணம்  தைமூர் என்பதால் அவன் சம்பந்தபட்ட ரத்தமயமான இந்திய அத்தியாயங்களை நம்மால் ஒதுக்க முடியவில்லை.ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலின் வடக்கில் முந்தைய சோவியத் ரஷ்யாவின் தென்கோடியில் இன்றைய உஸ்பெக் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சாமர்கன்ட் துருக்கிய மங்கோலிய இனத்தை சார்ந்த தைமூரின் தலைநகரும் அதுதான்.சாமர் கண்டியிலிருந்து கிளம்பிய தைமூரின் படை முதலில் பாக்தாத் நகரை சூறையாடியது.பிறகு பாரசீகம் வெறியும் வேகமும் கொண்ட தைமூரின் வீரர்கள் பாரசீகத்தை பந்தாடினார்கள்;.கொடூர களிப்புடன் அவர்கள் வெட்டி வீழ்த்திய மனித தலைகளின் எண்ணிக்கை சுமார் எழுபதாயிரம்.அவற்றை குவித்து நூற்றுகணக்கான மனித தலை பிரமீடுகளை உருவாக்கிய பிறகே தைமூர் பரசீகதி விட்டு வெளியேறினான்.அடுத்தபடி ரஷ்ய மாஸ்கோவுகுள் புகுந்து சூறையாடிவிட்டு சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு கொடு நேராக இந்தியாவை நோக்கி அவன் படை முன்னேற ஆரம்பித்தது.அவன் இலக்கு ஏற்கனவே கேள்விபட்டிருந்த புகழ் பெற்ற டெல்லி தான்.இந்தியாவை நோக்கி தைமூரின் படை முன்னேறிய வேகத்தோடு பறவைகள் கூட போட்டியிட முடியவில்லை.செப்டெம்பர் 22 1398 ஆம் ஆண்டு தைமூரின் படை சிந்து நதிக்கரையோரம் வந்துசேர்ந்தது.
                 இந்த பரபரப்பான செய்தி வந்து சேர்ந்த உடனே வாடா இந்திய பீதியில் ஆழ்ந்தது டெல்லியில் கோலோச்சிய பலம் வாய்ந்த சுல்தான் பிரோஸ் ஷா துக்ளக் இறந்து பாத்து ஆண்டுகள் ஓடிவிட்டன.நீயா நானா என்ற என்று கோஷ்டி சண்டையில் ஈடுபட்டிருந்த பொம்மை அரசர்கள் இருவர் டெல்லியை ஒரு ஒப்புக்கு ஆண்டு வந்தனர் ஒரு கோஷ்டி தகராறில் மல்லுகான் கை ஓங்க அவன் உதவியோடு டெல்லி அரியணையில்  உட்கார்ந்தான் முகமது ஷா அவன் பதவி ஏற்ற கையேடு தைமூரின் படை டெல்லியை நெருங்கி கொண்டிருக்கும் செய்தியும் வந்து சேர்ந்தது.
       வரட்டுமே ! ஒரு நொண்டி மன்னனுக்கா  நாம் பயப்படுவது? ஆர்ப்பாட்டம் போடும் அந்த மகோலிய நடோடியை தோற்கடித்தல் டெல்லி சுல்தனகிய தாங்கள்தான் உலக சாம்பியன்! என்கிற ரீதியில் மன்னனை மல்லுகான் இக்பால் உசுப்பேற்ற யார்  என்ன என்று விசாரிக்காமலே போர் உடை பூண்டான் முகமது ஷா.சிந்து நதியை கடந்த தைமூரின் படை மகிழ்ச்சியை கொண்டாட பஞ்சாப் பகுதியை சூறையாடி வெறியாட்டம் போட்டது
சுமார் ஒரு லச்சம் பேர் தைமூரின் அடிமைகளாக சிக்கினர்.அவர்களை மொத்தமாக கயிறுகளால் கட்டி தைமூரின் படை கூடவே இழுத்து சென்றது.டிசம்பர் ஆரம்பம் ....வாள்களை உயர்த்தியவாறே,ஏகமான ரத்த ஆர்வத்துடன் டெல்லி நகர எல்லையில் முகாமிட்ட இந்த மகோலிய படையின் மொத எண்ணிக்கை சுமார் தொண்ணூறு ஆயிரம்.
                டெல்லி பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த தைமூரிடம் நெருங்கி சென்ற சில தளபதிகள் களத்தில் குதிக்கும் தருணத்தில் கையோடு சுமார் ஒரு லட்சம் அடிமைகளை அதவும் இந்தியாவை சேர்ந்தவர்களை பக்கத்தில்       வைத்துகொண்டிருபது சற்று ஆபத்தானது என்றும் ஏதேனும் கலவரமான சூழ்நிலையில் அவர்கள் தப்பித்து எதிரிகளோடு சேர்ந்தால் அதனால் பிரச்சினை ஏற்படலாம் என்றும் எடுத்து சொன்னார்கள் ஆகவே,தேர்ந்த சில ஆயிரம் அடிமைகளை தவிர மற்றவர்களை தீர்துகட்டிவிடலம் எந்த்ரு௭ம் யோசனை சொன்னார்கள்.அடங்கி ஒடுங்கி போய் துவண்டு கிடக்கும் இந்த அடிமை கூட்டத்தை கொன்று தள்ளுவதில் நேரத்தை செலவிட்டு கொண்டிருக்க முடியாது.


                                                                    தொடரும் ......

 மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திக்கிறேன்

1 comment:

தொழிற்களம் குழு said...

ரொம்ப ஆர்வமாக இருக்கிறது.. அடுத்தடுத்த பதிவுகளை வேகமாக எதிர்பார்கின்றோம் இளவரசு...

அகத்திய முனிவர் வரலாறு

  முதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம்                                                                    ...