Thursday, February 01, 2018

அகத்திய முனிவர் வரலாறு

  முதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம்                                                                          அகத்தியர்
     தமிழ் முச்சங்க வரலாற்றில் தலைமை புலவராக விளங்கியவர் எனவும் தொல்காப்பியம் நூலுக்கு முன்பே  அகத்தியர் நூல் உள்ளதாக கூறப்படுகிறது.                                                                                                                                       அகத்திய முனிவர் பல நோய்களுக்கு மருத்துவ சந்தேகங்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான விவரங்கள் கொடுத்துள்ளார்.அகத்திய முனிவரின் பெயரால் உருவாகியுள்ள சமரச நிலை ஞானம் நூலில் உடம்பில் உள்ள நரம்பு முடிச்சுகள் பற்றி தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது.அகத்தியர் முனிவர் சித்த வைத்தியத்திற்க்கு செய்த பணி அளப்பறியது.    அகத்திய முனிவரின தோற்றம் அகத்திய முனிவரின் தோற்றத்தை பற்றி பல விிிதமாக  கூறப்படுகிறது.தாரகன் போன்ற அரங்கங்ள் உலகத்தை  ஆட்டிிப்படைத்ததாகவும் அவர்களை அழிக்க இந்திரன்,வாயு,அக்னி மூவரும் பூமிக்கு வந்தனர்.இவர்களை கண்ட  அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர்.அக்னி வாயுவுடன் கூடி பூமியில் அகத்தியராய் அவதரித்தார் என்றும், மின்திறன் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியர் தோன்றியதல் அகத்திய குடமுனி,கும்பயோகி எனும் பெயர்கள் கூறப்படுகிறது. முன்பு தேவர்களை வருத்திய அசுரர்கள் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர்.இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர்.தேவேந்திரன் வேண்டுகோள் படி அகத்தியர் சமுத்திர நீர் முழுவதும் குடித்து விட இந்திரன் அசுரர்களை அழித்தார்.பிறகு அகத்தியர் சமுத்திர நீரை மீண்டும் கடலுக்குள் விட்டார்.பின் அகத்தியர் நீரின் மேல் படுத்தபடி பண்ணிரெண்டு ஆண்டுகள் தவமிருந்து அரிய சக்திகளை பெற்றார்.           சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.அதனால் அகத்தியரை தென்திசைக்கு செல்லுமாறு உத்தரவிட்டார்.அகத்தியர் சிவபெருமான் ஆணைகிணங்க செல்லும்போது மேருமலைக்கு செல்ல விடாமல் நின்று விந்தியமலை அகத்தியரை கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது.நான் தென்திசை சென்று வரும் வரை வரையில் பணிந்து இருப்பாயக  என கூறினார்.மீண்டும் அகத்தியர் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.தென்திசை வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகப்பெருமான் ஆணைப்படி #அகத்தியம்# நூலை இயற்றியதாக கூறப்படுகிறது.சிவ பூஜை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் சாய்த்து விட கமண்டலத்திலிருந்த நீர் வழிந்து ஓட அது காவிரி ஆறு என பெயர் பெற்றது.           அகத்தியர் திருவனந்தபுரத்தில் ஜுவ சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.                                                                                         எம்பெருமான் முருகப்பெருமான் அருளால் அடுத்த பதிவில் சந்திப்போம்  ...........உங்கள் இளவரசன்        

No comments:

அகத்திய முனிவர் வரலாறு

  முதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம்                                                                    ...